கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக சற்று முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக வெறும் வாய் வார்த்தையால் மாத்திரம் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை தேவையற்ற ஆராவாரங்கள், சமூக ஊடக பதிவுகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்ந்து நடந்து படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி, உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலும் முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக வரும் வரை இறைவனிடத்தில் கையேந்துவோம்.
Post a Comment