நாட்டில் இன்று மாத்திரம் இதுவரை 744 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் (பேலியகொட, சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 62 ஆயிரத்து 416 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதேவேளை இன்று நான்கு கொரோனா மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment