ஜனாஸா அடக்கத்தை அனுமதிப்பது சிக்கலானது - உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை கட்டாயமாக எரிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக வர்த்தமானியூடாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், எந்த இடங்களில் அதற்கான அனுமதியை வழங்குவது? இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? போன்ற விடயங்களுக்கான 'வழிகாட்டலை' வெளியிடும் வரை ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாஸா அடக்கத்தை அனுமதிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அவை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றைக் காண்பதில் பல்வேறு இடர்கள் இருப்பதாகவும் உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கிறார். 

நிலத்தடி நீரூடாக கொரோனா பரவும் எனக் காரணம் கூறி கட்டாய எரிப்பை அரசு மேற்கொண்டு வந்திருந்த போதிலும், மேலதிக விளக்கங்கள் இன்றி அண்மையில் குறித்த வழமையை மாற்றுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்த சூழ்நிலையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஜனாஸா அடக்கம் எதுவும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.