பதிவு செய்யப்பட்ட பள்ளிகள் காலத்துக்குக் காலம் நிருவாகத் தெரிவு செய்த போதும் வக்பு சட்டப்படி நியமணம் பெறுவதில் அசிரித்தையாக உள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆவணங்களை சமர்ப்பித்து முறையான நியமனங்களைப் பெறுமாறு வேண்டி அத்தகைய 1400 பள்ளிகளுக்கு பதிவுத் தபாலில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றுள் 257 பள்ளிகள் மாத்திரமே ஆவணங்களை அனுப்பி பதிலளித்துள்ளன; 1143 பள்ளிவாயல்கள் ஆவணங்களை அனுப்பத் தவறியுள்ளன. கூடிய விரைவில் ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு 1143 பள்ளிகளும் வேண்டிக் கொள்ளப்படுகின்றன.
நிருவாகத்தினரின் பதவிக்காலம் முடிவடைந்த பள்ளிகள் நிருவாகத் தெரிவு செய்வதற்கான சூழ்நிலை, கொவிட் - 19 காரணமாக, இல்லை என்பதை கருத்தில் கொள்ளவும். அத்தகைய பள்ளிகள் தொடர்பில் கள அறிக்கை பெறப்பட்டு தனித்தனியாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
(முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்)
Post a Comment