இன்றும் உச்சத்தை தொட்ட கொரோனா; நான்கு மரணங்களும் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 124 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.