பல்கலைக்கழக நுழைவிற்கான அனுமதி கிடைத்துள்ள மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முறையின் கீழ், லெப்டொப் கணினிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக, இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ள ஆறு மாணவர்களுக்கு கடிதங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மக்கள் வங்கி ஆகியவையின் அனுசரணையின் கீழ், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்காக மக்கள் வங்கி 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இணையத்தள வசதிகள், கணினி மென்பொருள் என்பவற்றுடன், நான்கு வருட உத்தரவாதத்துடனான லெப்டொப் வழங்கப்படுகின்றன. கணினியின் பெறுமதி 80 ஆயிரம் ரூபாவாகும். இந்தத் கடனை தொழில் வாய்ப்புக்களை பெற்றதன் பின்னர் ஆறு ஆண்டு காலப்பகுதிக்குள் செலுத்த முடியும். கல்வி கற்கும் காலத்தில் அதனை மாதாந்தம் 500 ரூபா வீதம் செலுத்த முடியும்.
Post a Comment