ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை - பிரதமர் அலுவலக அதிகாரி!

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான செய்தி, முழுமையாகவே உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து தம்மால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு பதிலளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ”அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்றே பிரதமர் பதிலளித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை என பிரதமர்; அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்ததாக த லீடர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரசத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வந்த பின்னணியிலேயே, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.