சற்றுமுன் வெளியான செய்தி - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலைகளுக்குள் நடத்தப்படக்கூடிய விவாதப்போட்டி, பேச்சுப்போட்டி, மரநடுகை நிகழ்வு ஆகியவற்றின் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், அதிகளவானோரை ஒன்றிணைக்காது நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நடத்தப்படும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வுகளின் போதும் சமூக இடைவௌியைப் பேணி, சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.