இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் , அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கம்பஹா பிரதேசதை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 955 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நாட்டில் இதுவரை 72,166 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
Post a Comment