இலங்கையின் பெயர் மாற்றம்; பௌத்தம் அரச மதம்; கம்மன்பில யோசனை!

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, இலங்கையின் பெயரை மாற்ற வேண்டுமென்று பிவித்துரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய 13 அம்ச ஆவணத்தை நேற்று சனிக்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைத்து பேசும்போது இதனை தெரிவித்தார்.

அத்தோடு ஒரு நாடு ஜனநாயகமாகவோ அல்லது சோசலிசமாகவோ இருக்க வேண்டும். ஆனால் பெயர்களால் அல்ல, எனவே இலங்கையின் பெயரை இலங்கை குடியரசாக மாற்ற வேண்டுமென முன்மொழிந்தார்.

மேலும் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டுமென்றும் வெளி சக்திகள் இலங்கை பிளவுபடுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

மேலும் புவியியல் இருப்பிடம் காரணமாக இலங்கை 500 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே வெளிப்புற தலையீட்டைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

எனினும் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளாக பௌத்தம் நாட்டின் பெரும்பான்மையினரின் மதமாக உள்ளதென்றும், பௌத்தத்தை இலங்கையின் அரச மதமாக மாற்ற வேண்டுமென்றும் முன்மொழிந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.