மத்திய மாகாணத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 458 கொரோனா நோயாளர்களில், அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என கொவிட் – 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பில் நேற்று 94 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கம்பஹாவில் 76 பேரும் இரத்தினபுரியில் 59 பேரும் கண்டியில் 38 பேரும் குருநாகலில் 28 பேரும் நுவரெலியாவில் 25 பேரும் களுத்துறையில் 22 பேரும் மாத்தளையில் 22 பேரும் மாத்தறையில் 18 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 15 பேர், பதுளை மற்றும் அம்பாறையில் 12 பேர், மொனராகலையிலிருந்து 09 பேர், காலியில் இருந்து 07 பேர், யாழ்ப்பாணத்திலிருந்து 05 பேர், கேகாலையிலிருந்து 05 பேர், முல்லைத்தீவிலிருந்து 02 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா 02 பேரும் புத்தளம், பொலனறுவை, வவுனியா, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் நேற்று பதிவாகியுள்ளனர்.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 76 ஆயிரத்து 514 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 496 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 523 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பொரலஸ்கமுவ, கல்கிசை, கொட்டுகொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.