இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று நாட்டில் 801 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 653 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 865 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 696 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் 67 சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 567 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 598 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Post a Comment