சற்றுமுன் நாட்டில் ஆறு கொரோனா மரணங்கள் பதிவானது; 774 பேருக்கு தொற்று உறுதி.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, திவுலன்கடவல, பல்லெதவின்ன, ஹங்வெல்ல, நுகேகொடை, வத்தளை மற்றும் ஹுன்னஸ்கிரிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 774 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 428 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.