இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், வக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 722 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment