கண்டியில் 65 நாட்களில் பின்னர் விடுவிக்கப்பட்டது முக்கிய பகுதி.

கொவிட்-19 தொற்று கண்டி மஹய்யாவ பகுதியில் வேகமாகப் பரவியதன் காரணமாக கடந்த டிசம்பர் 10ம் திகதி முதல் 64 நாட்களாக மூடப்படுடிருந்ததோடு மக்கள் போக்குவரத்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அப்பிரதேச மக்களின் நீண்ட போராட்டத்தையடுத்தும் பிரதேசத்தில் நோய் பரவல் கட்டுப்பாட்டினுள் வந்தததையும் அடுத்தும் சுகாதார அதிகாரிகளால் போக்குவரத்து தடை நீக்கப்பட்டது.

மஹய்யாவையைச் சேர்ந்த எம்.சி. பிரிவு. மற்றும் எம்.டி பிரிவு ஆகிய இரண்டும் கடந்த 64 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பிரதேச மக்கள் தமது அன்னறாட பணிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்து சிரமத்திற்கு மத்தியில் காணப்பட்டனர்.

சுமார் 2000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் அடைப்பட்டிருந்தனர்.

போக்குவரத்து தடை நீக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு துறை அதிகாரிகளை பொது மக்கள் வரவேற்று உள்ளே அழைப்பதை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.