நாட்டில் மேலும் 517 பேருக்கு கொரோனா; மேலும் மூவர் பலி!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 506 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், 5, ஆயிரத்த 938 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்க திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாத்தளை பொது வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்க மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலகெடிஹேன பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது வத்துப்பிட்டி வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா மற்றும் பக்றீறியா தொற்று நிலை என்பனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று உறுதியானவராக கண்டறியப்பட்டார்.

அதன் பின்னர் அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா, சிறுநீரக பாதிப்பு, உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.