நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொரோனா; எட்டு பேர் தொற்றால் பலி.

நாட்டில் நேற்றைய தினம் 514 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 78,420 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 647 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 71,823 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,167 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 685 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.