திருமண நிகழ்வுகளில் பங்கேற்பாளர் தொகையை 50-ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தம்!

இலங்கையில் திருமண நிகழ்வுகளில் பங்கேற்போர் தொகையை 150 இல் இருந்து 50-ஆக மட்டுப்படுத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா புதிய பிறழ்வு தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து திருமண நிகழ்வுகளில் பங்கேற்போர் தொகையை 150 இல் இருந்து 50 ஆகக் குறைப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்தனர். எனினும் தற்போதுள்ள 150 பங்கேற்பாளர்கள் என்ற எண்ணிக்கை தொடர்ந்து பேணப்படும் என தொற்று நோய்கள் மற்றும் கோவிட்19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.


திருமணங்களுடன் தொடர்புடைய தொழில்துறையைச் சேர்ந்தோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளார். எனினும் தொற்று நோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவில் இந்நேரத்திலும் மாற்றங்கள் வரலாம் எனவும் தொற்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.