நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 05 உயிரழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள்:-
- கபுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர்.
- மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர்.
- கெட்டவல பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர்.
- குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர்.
- அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர்.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 975 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70806 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment