கண்டியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 4 மாத குழந்தையொன்று பரிதாபகரமாக பலி.

கொரோனா காரணமாக 4 மாத குழந்தையொன்று மரணித்துள்ள சம்பவமொன்று பேராதனை பகுதியில் பதிவாகியுள்ளது.

கண்டி-பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 மாத குழந்தையொன்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டி-நுகவெல பகுதியில் வசித்து வந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.