அகில இலங்கை ஸலபி கவுன்சில், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ), ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) உள்ளிட்ட 43 அமைப்புகளை தடை செய்ய அரசு கவனம் செலுத்தி வருவதாக புலனாய்வு பிரிவுகளை மேற்கோள் காட்டி இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவினர் இந்த இயக்கங்களை நீண்ட காலமாக கண்கானித்து வருவதாகவும், இவற்றின் போதனைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் திவயின பத்திரிக்கையின் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பத்திரிக்கை செய்தி வெறுமனே ஒற்றைப் பார்வை ஊகத்தை அடிப்படையாக வைத்து மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இருப்பினும், ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படும் இயக்கங்களை தடை செய்ய வேண்டுமாயின் அவை ஆயுத கலாசாரத்தை ஊக்குவித்ததாகவோ, தீவிரவாத சிந்தனையை போதித்ததாகவோ, தேச துரோகா செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவோ நிரூபிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment