இலங்கையில் ஆபத்தான உருமாறிய கோவிட்19 வைரஸ் - சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 963 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரியா வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மக்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொவிட் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

அதேநேரம் பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரங்கள் மற்றும் பி.சி.ஆர் மாதிரிகள் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தாமதம் போன்ற காரணங்களினால் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.