மத்திய மாகாணத்தில் கொவிட்-19 பரவல் தீவிரம்; இதுவரை 35 பேர் உயிரிழப்பு

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5201 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து 3329 பேர் பதிவாகியுள்ளனர். அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் 1131 தொற்றாளர்களும் , மாத்தளை மாவட்டத்தில் 741 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் (9) காலை 6.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாகாணத்திற்குள் மொத்தம் 72 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி கண்டியிலிருந்து 41, பேரும் நுவரெலியாவிலிருந்து 25, மாத்தளைலிருந்து 06. பேரும் புதிய தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 26 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 07 பேரும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருவருமாக மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கண்டி மாவட்டத்திலுள்ள 23 சுகாதார பிரிவுகளிலும் கண்டி மாநகர சுகாதாரப் பிரிவு- (441), அக்குறணை சுகாதாரப் பிரிவு -(369) ,பாத்ததும்பறை சுகாதாரப் பிரிவு-(234), கம்பளை சுகாதார பிரிவு -(163), பூஜாப்பிட்டிய சுகாதாரப்பிரிவு -(260), மற்றும் குண்டசாலை சுகாதாரப் பிரிவு -(123), ஹாரிஸ்பத்துவ சுகாதாரப்பிரிவு - (125) , யட்டிநுவர சுகாதாரப்பிரிவு - (120) ஆகிய பிரிவுகளில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அதுபோன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள 13 சுகாதார பிரிவுகளில் அம்பகமுவ சுகாதாரப்பிரிவில் - (201) மாத்திரம் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மாத்தளை மாவட்டத்திலுள்ள 13 சுகாதார பிரிவுகளில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் எந்த பிரிவுகளிலும் அடையாளம் காணப்படவில்லை. உக்குவளை சுகாதாரப்பிரிவில் 258 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் கொவிட் தொற்று காரணமாக கண்டி மாவட்டத்தில் எட்டு இடங்களில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் பேராதனை நிலையத்தில் 356 பேரும் கண்டி- பொல்கொல்லை மத்திய நிலையத்தில் 254 பேரும், தெல்தெனிய நிலையத்தில் 100 பேரும் லக்கல நிலையத்தில் 117 பேரும் தற்பொழுது சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏனைய சிகிச்சை நிலையங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் நேற்று முன்தினம் காலை 6.00 மணி வரையுள்ள காலப்பகுதியில் புதிதாக 106 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 99 பேர் பூரண சுகத்துடன் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியாகியுள்ளனர்.

மேலும் ஹந்தான சிசில என்ற நிலையம் தவிர்ந்த அனைத்து தொற்றாளர் சிகிச்சை நிலையங்களிலும் தற்பொழுது 1070 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரியவருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.