நாவலப்பிட்டியில் 15 மாணவர்கள் உட்பட 22 பேருக்கு கொரோனா!

நாவலபிட்டி பஸ்பாகே கோரளை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி வெஸ்டோல் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07 மற்றும் தரம் 11 இல் கல்வி பயிலும் 15 மாணவர்கள், ஒரு ஆசிரியை மற்றும் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பொது சுகாதார காரியாலயத்தில் பணிபுரியும் ஆறு பேர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஸ்பாகே கோரளை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 07 வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக மேற்குறிப்பிட்ட 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை குறித்த தொற்றாளர்களோடு தொடர்பினை பேணிவந்த 112 பேருக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தொற்றுக்கு உள்ளான 22 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.