கண்டியில் நேற்று 101 பேருக்கும், நுவரெலியாவில் 10 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 653 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 101 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 67,850 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் நேற்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 343 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 6,046 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.