பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படும் ஆனால் கடும் நிபந்தனை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் மாதத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுமென்ற கடுமையான நிபந்தனையையும் முன்வைத்துள்ளன.

அடுத்த 14 நாட்கள் ஆட்சேபனை காலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளையும், மறுப்புகளையும் முன்வைக்க கால அவகாசம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.