மற்றுமொரு பிரபல அரசியல்வாதியின் PCR பரிசோதனை முடிவு வெளியானது.

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலவுக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொவிட் தொற்று இல்லையென பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 05-01-2021ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அவருடன் நெருக்கமான தொடர்பினை பேணியவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தானாக முன்வந்து அவர் தனது குடும்பத்தினருடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். இந்தப் பரிசோதனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எவருக்குமோ கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.