கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சருக்கு, கொவிட் தொற்று அறிகுறிகள் அதிகரித்த பின்னணியில், அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுகாதார அமைச்சரின் உடல் நிலைமை வழமைக்கு திரும்பி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment