நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா நோயாளர்கள்.

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 56,000 கடந்துள்ளது.

நேற்றைய தினம் 887 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் அதிக கொவிட்19 நோயாளர்கள் நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 76 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 866 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52202 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

கட்டாரில் இருந்து வந்த 8 பேரும், குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 3 பேரும், ரஷ்யா, ஐக்கிய அரபு ராச்சியம், யுக்ரைனில் இருந்து வந்த தலா ஒருவரும், அவர்களில் அடங்குகின்றனர்.

7 ஆயிரத்து 816 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 769 பேர் நேற்று குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47984 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர கண்டி, காலி, இரத்தினப்புரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் கொழும்பு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 185 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 11507 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 176 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

எவ்வாறாயினும் இந்த மாவட்டங்கள் தவிர கண்டியில் இதுவரையில் 2016 பேருக்கும் காலி மாவட்டத்தில் ஆயிரத்த 46 பேருக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் 1045 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.