புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் அவசர சிகிச்சைகளுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வௌிவேறு சம்பவங்களின் கீழ் புத்தாண்டு பிறக்கின்ற போது 111 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லயனல் முஹன்திரம் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விடவும் இந்த முறை 109 பேர் குறைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இவ்வாறு வௌிவேறு சம்பவங்களின் கீழ் 220 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Post a Comment