பொலிஸ் மா அதிபரின் நெருங்கிய உறவினர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு, பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையுறுகளை ஏற்படுத்துவபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி, சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதேபோன்று, போலியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதனை மையமாகக்கொண்டு செயற்பட வேண்டாமெனவும், அந்த அழைப்புகள் குறித்து விசாரணைகளை முனனெடுக்குமாறும் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மாஅதிபரின் உறவினர் அல்லது நெருங்கிய தொடர்புடையவர்என குறிப்பிட்டு, அழைப்பினை ஏற்படுத்தி விசாரணைகளுக்கு அழுத்தங்களை ஏற்ப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான அழைப்புகளைினால் பொலிஸ் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம் வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
Post a Comment