நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு 2.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதே நேரமளவில் குறித்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment