சற்றுமுன் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கூடியது பாராளுமன்றம்!

பாராளுமன்றம் சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. 

இந்த வாரத்திற்கான பாராளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று (18) நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

4 பாராளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த உள்ளிட்டோர், பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை ஆரம்பமாகிறுக்கும் பாராளுமன்ற அமர்வில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

முற்பகல் 10.00 முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வினாக்கள் பத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது தினமான நாளை (20) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு யோசனை மீதான விவாதம் முன்னெடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். இவ்விவாதத்துக்காக முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அமைச்சர்களால் முன்வைக்கப்படுகின்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களால் வெளியிடப்படுகின்றன கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. 

அன்றையதினம் மதிய போசனத்துக்காக சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும். அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மு.ப 11 மணிவரையான ஒரு மணித்தியாலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.