நாட்டிற்கு கொண்டுவரப்படும் கொரோனா தடுப்பூசி – ஜனாதிபதி விடுத்துள்ள தீர்மானமிக்கிய தகவல்..!

கொரோனா தடுப்பூசிகளை, சர்வதேச நாடுகளில் இருந்து மிக விரைவில் கொள்வனவு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

(முதலில் ஏற்பட்ட கொரோனா தொற்றை நாம் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தினோம். இரண்டாவது அலையில் ஏற்பட்ட வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதினால், மக்கள் என்ற வகையில் நாம் இதனைப் புரிந்து கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்தும் தடுப்பூசிகளை நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மற்றும் சீனா ஜனாதிபதி ஆகியோருக்கும் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை எழுதினோம். தடுப்பூசிகளை மிக விரைவில் வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்தும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒரு தொகுதி தடுப்பூசிகளை மாத்திரம் எமக்கு இலவசமாக வழங்குவார்கள். அடுத்தவற்றை நாம் கொள்வனவு செய்யவுள்ளோம். இதன்படி தேவையான நபர்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள நாம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.