பயிலுனர் பட்டதாரிகள் திட்டத்திற்கு அமைய அரச தொழில் பெற்றிருப்போருக்கு தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் வழங்கவுள்ளது.
இதன் போது 2 ஆயிரம் பேருக்கு இந்த வாய்ப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரச சேவையிலுள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை தகுதியுடையவர்களாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் பட்டதாரி நியமனங்களுக்கு 91 ஆயிரத்து 665 பேர் விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களுள் 49 ஆயிரத்து 478 பேருக்கு இதுவரை நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment