நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் போது எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை ரீதியான சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 3 பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
Post a Comment