உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி, கோதமிபுர 24 ஆவது தோட்டம் மற்றும் கோதமிபுர 78 ஆவது தோட்டம் ஆகியன இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிரான்பாஸ், மாளிகாவத்த மற்றும் தெமடகொட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.