இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் சற்று முன்னர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி முதலாவது தடுப்பூசி டொஸ்கள் வைத்தியசாலையில் படையினருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்று தொடக்கம் ஆறு வைத்தியச சாலைகளில் வழங்கப்படுகின்றது.
சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment