கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது - விபரம் உள்ளே!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 09.31க்கு புறப்பட்ட குறித்த விமானம், காலை 11.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

Oxford AstraZeneca Covishield எனும் குறித்த தடுப்பூசி இந்திய அரசாங்கத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Serum நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட 5 இலட்சம் தடுப்பூசிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் 42 பொதிகளில் பொதியிடப்பட்டு, இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிவிசேட பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.