உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட புனித - என்றூஸ் வீதி, புனித - என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment