இலங்கையில் கொரோனாவிற்கு ஒரு வயது!

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.

இலங்கையில் முதன் முதலாக சீன நாட்டிலிருந்து வருகைத் தந்த பெண்ணொருவருக்கு கடந்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19n ஆம் திகதி அவர் முழுமையாக குணமடைந்து தனது நாடு திரும்பினார்.

இதேவேளை, கடந்த வருடம் மார்ச் மாதம் 11ஆம் திகதி, கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன், கடந்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்தார்.

இதேவேளை 2020 மார்ச் 20 முதல் மே 11 ஆம் திகதி வரை 52 நாட்கள் நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலையில் இருந்தது. இந்த முடக்கல் நிலையானது ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலையும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கை சிறந்த முறையில் கெவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டையும் பெற்றது.

எனினும் அதன் பின்னர் 2020 ஒக்டோபர் 04 ஆம் திகதி மினுவாங்கொடை கொவிட் கொத்தணிப் பரவல் இலங்கையின் அனைத்து சுகாதார தடுப்பு சுவர்களையும் தகர்த் தெறிந்தது.

எவ்வாறெனினும் நாட்டில் இந்த ஒரு வருடக காலப் பகுதிக்குள் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 59,922 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 51,046 பேர் குணமடைந்துள்ளதுடன், 288 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.