அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய வீட்டுக்கடன் திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய, நகர மற்றும் புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீடமைப்புத் திட்டத்தில் தொழில் நிமித்தம் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயனாளர் ஒருவர் அதிக பட்சமாக ஒரு மில்லியன் ரூபாவினை 6 தசம் 25 வீத வட்டி அடிப்படையில் கடனாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கடன் தொகையினை 25 ஆண்டுகளில் மீள செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.