நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 540 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 536 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய நால்வர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் ஆவர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 48,380 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட - மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 44,382 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 487 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 41,325 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 603 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அதனால் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நாட்டில் 232 ஆக உயர்வடைந்துள்ளது.

01. நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆண் ஒருவர். நீர்கொழும்பு பொது வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன். அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 08ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர். மாஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்;ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் புற்றுநோய் நிலை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2021 ஜனவரி 09ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவி; நிமோனியா மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.