மத்திய மாகாணத்தில் ஐந்து வருடகாலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரச ஊழியர்களை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் ஐந்து வருடகாலத்திற்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அனைத்து அரச ஊழியர்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஏனைய பணி இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தெரிவித்துள்ளார். சேவைத் தேவைகள் காரணமாக இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்படாத ஒரு சிலரைத் தவிர, ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் பொது ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். மேல் முறையீட்டில் ரத்து செய்யக்கூடாது எனவும் வேறு எந்த முறையீட்டினையும் ஏற்க வேண்டாம் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment