வலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் வெளியான செய்தி..

வலப்பனை பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழுவொன்று குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளது.

புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்தார்.

குறித்த நிலநடுக்கம் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வலப்பனை பிரதேசத்தில் 1.8 ரிக்டர் அளவில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்த கருத்து தெரிவித்த புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல, "சம்பவத்துடன் தொடர்புடைய சரியான தகவல்களை இன்றைய தினத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கிறேன். தற்போது உள்ள தகவலின் படி குறித்த நிலநடுக்கம் இயற்கையாக இடம்பெற்றது என உறுதியாக கூற முடியும்" என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.