ஐக்கிய தேசியக் கட்சி பதவிகளில் அதிரடி மாற்றம்! சற்றுமுன் வெளியான செய்தி.

சிரிகோத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய பதவிகளை நியமித்துள்ளது. 

இதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பாலிதா ரங்கே பண்டாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உறுப்பினரான வஜிர அபேவர்தன கட்சியின் தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதேவேளை ஏ.எஸ்.எம். மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக நீடிப்பார் எனவும் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.