பொது மக்களின் நலன் கருதி ஜனாதிபதி மேற்கொண்ட விசேட திட்டம்..!!

பொது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் இணைத் தலைவர்களாக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க மற்றும் கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் செயாலாளராக ஓய்வு பெற்ற அமைச்சு செயலாளர் ஜி.எஸ் விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழு முதலீடுகள் மற்றும் நிர்மாணத்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தொடர்புடைய தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை வழிகாட்டுதல்கள், அனுமதிப் பத்திரங்கள் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள், அரச நிதி மற்றும் வரி வருவாய்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றை ஏற்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி முழுமையாக மீளாய்வு செய்யும்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றறிக்கை வழிகாட்டுதல்களை வெளியிடுவதும், அவ்வப்போது பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதும் காரணமாக அடிப்படை நோக்கத்திலிருந்து விலகல்களுக்கு வழிவகுத்துள்ளதா? என்பதையும் இந்த குழு ஆய்வு செய்யும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் பயனுள்ள புதிய ஒழுங்குமுறை வழிமுறைகளை அடையாளம் காண்பதற்காக உலகளாவிய தரங்களுக்குள் முன்னர் குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பொருந்தக்கூடிய தன்மையையும், இலங்கையில் அவற்றின் பொருத்தப்பாட்டினையும் மதிப்பீடு செய்யவுள்ளது.

தற்போதுள்ள சிக்கலான மற்றும் ஒழுங்குமுறை சட்ட அமைப்புகளில் அவற்றைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் செலவை மதிப்பீடு செய்தல் மற்றும் மேற்கண்ட சட்ட விதிமுறைகளின் விளைவாக ஊழல் மற்றும் ஒழுங்கற்ற நடைமுறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியம் பற்றி மதிப்பீடு செய்தல் என்பனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழு மேற்கொள்ளவுள்ள பணிகளாகும்.

தற்போதுள்ள சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு, எளிமைப்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கலுக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தேசிய அளவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் பல்வேறு ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் உரிமம் வழங்கும் செயல்முறைகள் காரணமாக செயல்முறை இரட்டிப்பு நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அத்தகைய செயல்முறைகளை பொருத்தமான முறையில் திருத்தம் செய்யும்.

இந்த செயல்பாடுகளைச் செய்ய ஆணைக் குழுவிற்கு 90 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவுக்கு அதன் செயல்பாடுகளைச் செய்வதற்கு தேவையான சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்க அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.