கொரோனா தொற்று பரவல் தொடர்பில் அமைச்சர் பவித்ராவின் விசேட அறிவித்தல்

நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போது, சுகாதார வழிமுறைகளை உரியவகையில் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒனறில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக, சுற்றுலா பயணிகளை நாட்டுககு அழைத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், சுற்றுலாதுறையினருக்கு வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவிததுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றைக்க கட்டுப்படுத்துவதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார தரப்பினரின் ஒத்துழைப்புகளை போன்றே தனியார் துறையினரும் ஒத்துழைக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களும் எதிர்வரும் காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.