எஸ்ட்ரா செனகா ஒக்ஸ்போர்ட் கொவிட் 19 தடுப்பூசியை அவசர தேவைப்பாடுகளுக்காக பயன்படுத்த தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எஸ்ட்ரா செனகா ஒக்ஸ்போட் தடுப்பூசியின் மாதிரிகள் நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக கடந்த 19 ஆம் திகதி தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
அதன் பின்னர் குறித்த தடுப்பூசியின் ஆய்வு கூட பரிசோதனைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் தற்போது அவசர பயன்பாட்டிற்காக அதனை பயன்படுத்த தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment