நாட்டில் நிலவும் தற்போது கொரோனா நிலவரம் ஒரே பார்வையில்...

நாட்டில் நேற்றைய தினம் 770 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனால் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 55,189 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 768 பேர் மினுவாங்கொட - பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய இருவர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவார்.

அதன்படி தற்போது பேர் மினுவாங்கொட - பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 51,329 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 621 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையினால், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 47,215 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 7,700 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்று சந்தேகத்தில் 688 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், இலங்கையில் கொவிட் - 19 தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 274 பதிவாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.